உலகம்

சிரியாவில் மீண்டும் ஒருமுறை அரசும் ரஷ்யாவும் இணைந்து தாக்குதல்களைத் தீவிரப் படுத்தியுள்ளன. கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் இட்லிப் மாகாணத்தில் ரஷ்ய போர் விமானங்கள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளன.

கடந்த 3 வாரங்களில் இது போன்ற தாக்குதல் சிரியாவில் நடப்பது இதுவே முதன் முறையாகும்.

சிரியாவில் மாபெரும் மனிதாபிமானக் குற்றம் நடப்பதாகவும் சிரிய அதிபர் பஷார் அல் அசாத் பொறுப்பின்றி தாக்குதல்களைத் தொடுத்து வருவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். இந்த எச்சரிக்கையை நிராகரித்த ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கவ் சிரிய இராணுவமும் தாமும் இணைந்து அங்கு தீவிரவாதத்தை வேரோடு அழிப்பதற்காகவே இத்தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றோம் என்று தெரிவித்துள்ளார். பெஸ்கவ் மேலும் கூறுகையில் இட்லிப் இல் ஜிஹாதிக்களுடன் இணைந்து செயற்படும் அல்கொய்தா போராளிகள் சிரிய இராணுவப் பாசறைகளுக்கும் தளவாடங்களுக்கும் அச்சுறுத்தலாக விளங்குவதுடன் அங்கு உள்நாட்டுப் போர் ஒரு முடிவுக்கு வர முடியாது தடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இட்லிப் இன் மேற்குப் பகுதியில் ரஷ்யா தொடுத்த வான் வழித் தாக்குதலில் 3 பொது மக்கள் கொல்லப் பட்டதாக மீட்புக் குழுவான வைட் ஹெல்மெட் தெரிவித்துள்ளது. இதேவேளை இட்லிப் இல் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து அதனை மீட்கும் போரில் ஆயிரக் கணக்கான அப்பாவிப் பொது மக்களது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பது தொடர்பில் அமெரிக்காவும் மேற்குலகும் கலக்கமடைந்துள்ளன. மேலும் இப்போரிலும் முன்பு போன்று இரசாயன ஆயுதங்களை சிரிய அரசு பயன்படுத்தினால் அமெரிக்கா பதில் நடவடிக்கையில் நிச்சயம் இறங்கும் என்றும் திங்கட்கிழமை அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் ஆபத்தான தீவிரவாதக் குழுக்களில் ஒன்றான ஹக்கானி வலையமைப்பினனைத் தாபித்த ஜலாலாலௌடின் ஹக்கானி என்பவன் நீண்ட நாள் சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளதாக செவ்வாய்க்கிழமை ஆப்கான் தலிபான்கள் தெரிவித்துள்ளனர். தலிபான்களுடன் இணைந்து 1995 முதல் செயற்பட்டு வந்த ஹக்கானி வலைமைப்பானது 1970 களில் தாபிக்கப் பட்டது. கடந்த காலத்தில் ஆப்கானில் பல வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் பாராளுமன்றம் என்பவற்றின் மீது இந்த ஹக்கானி போராளிகள் மோசமான தற்கொலைத் தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தவர்கள் ஆவர்.

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் கொரோனாவால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை நேற்று 6 லட்சத்தை தாண்டியதையடுத்து உலகில் கொரோனாவால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது.

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப் படுத்தப் பட்ட பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷாஹ் மஹ்மூட் குரேஷி ராவல்பிண்டியில் இருக்கும் இராணுவ வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

அண்மைக் காலமாக இந்தியா, தைவான், ஹாங்கொங் மற்றும் திபேத் ஆகிய நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில், தென்சீனக் கடற்பரப்பில் 2 போர்க் கப்பல்களை அனுப்பி போர்ப் பயிற்சியை ஆரம்பித்துள்ளது அமெரிக்கா.