உலகம்
Typography

கடந்த ஒரு வாரமாக லிபியாவின் தலைநகர் திரிபோலியில் இரு வேறு ஆயுதக் குழுக்களுக்கு இடையே இடம்பெற்று வரும் கடும் மோதல்களில் 40 இற்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர்.

இதனை லிபிய சுகாதாரத் துறை அமைச்சகம் உறுதிப் படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் திரிபோலியின் தெற்கே உள்ள அயின் ஜாரா என்ற சிறை தகர்க்கப் பட்டுள்ளது.

இதன் அருகே ஆயுதம் தாங்கிய இரு குழுக்கள் இரு தினங்களுக்கு முன்பு கடுமையாக மோதிக் கொண்டன. இம்மோதலில் துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளும் கூடப் பாவிக்கப் பட்டன. இதனால் குறித்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அயின் ஜாரா சிறைக் கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதன்போது சிறைக் கதவுகளை உடைத்துக் கொண்டு கிட்டத்தட்ட 400 கைதிகள் வெளியே தப்பி ஓடினர்.  தமது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் அங்கிருந்த சிறைக் காவலர்கள் குறித்த கலவரத்தையோ அல்லது சிறைத் தகர்ப்பையோ இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதைவிட திரிபோலியிலுள்ள ஒரு அகதி முகாம் மீதும் ராக்கெட்டு தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. இதில் இருவர் கொல்லப் பட்டும் பலர் படுகாயம் அடைந்தும் உள்ளனர். ஆயுதக் குழுக்களுக்கு இடையே மோதல்களைக் கட்டுப்படுத்த லிபியாவில் கால வரையறை இன்றி அவசர கால நிலை பிரகடனப் படுத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்