உலகம்
Typography

உலகின் 5 ஆவது மிகப் பெரிய அணுசக்தி வல்லரசாக பாகிஸ்தான் விரைவில் மாறக் கூடிய அபாயம் உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே 140 முதல் 150 வரையிலான அணுவாயுதங்களைக் கொண்டுள்ள பாகிஸ்தான் இவ்வாறே தொடர்ந்தால் 2025 ஆமாண்டுக்குள் 250 முதல் 250 அணுவாயுதங்களை உடைய நாடாக மாறுமாம்.

இது குறித்து ஹான்ஸ் எம் கிறிஸ்டென்சன் மற்றும் ராபர்ட் எஸ் நோரிஸ் ஆகிய அமெரிக்கர்களால் வெளியிடப் பட்ட ஒரு அறிக்கையில் கடந்த ஒரு தசாப்தத்தில் பாகிஸ்தானின் அணுசக்தி பாதுகாப்பு குறித்த அமெரிக்க மதிப்பீட்டில் கணிசமான மாற்றம் தந்திரோபாய அடிப்படையில் அணுவாயுதங்களை அறிமுகப் படுத்தியதன் விளைவாக ஏற்பட்டுள்ளது எனப்பட்டுள்ளது. இதன் மூலம் 2025 அளவில் 220 இற்கும் அதிகமான அணுவாயுதங்களை பாகிஸ்தான் கொண்டிருந்தால் அது உலக அளவில் 5 ஆவது அதிக அணுவாயுத வல்லரசாக உருவெடுக்கும் எனப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் தற்போது 4 புளூட்டோனியம் உற்பத்தி உலைகள் மற்றும் யுரேனிய செறிவூட்டல் வசதிகள் என்பன விரிவாக்கம் அடைந்து வருகின்றன. இன்னும் 10 ஆண்டுகளுக்குள் இவற்றின் திறன் மிகவும் அதிகரிக்கப் பட்டு விடும். இத்தகவல்களும் அணுவாயுதங்களைக் கையாளக் கூடிய நிலத்தடி வசதிகளும் பாகிஸ்தானிடம் இருப்பதும் பாகிஸ்தான் இராணுவ முகாம்களை ஆய்வு செய்த பெருமளவு வர்த்தக செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

ஆசியப் பிராந்தியத்தில் பாகிஸ்தானிடம் அணுவாயுதங்கள் அதிகரிப்பது என்பது அப்பிராந்திய படை பலத்தின் சமநிலையைக் குழப்பி விடும் என்பதுடன் பாகிஸ்தான் எவ்வளவு அணுவாயுதங்களைக் கொண்டுள்ளதோ அதை விட அதிகமாகத் தயாரிக்க இந்தியா எத்தனிக்கும் என்பதாலும் அமெரிக்கா உட்பட மேற்குலகை கவலை கொள்ளச் செய்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்