உலகம்
Typography

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து (UAE) 521 பயணிகளுடன் நியூயோர்க் நோக்கிப் புறப்பட்ட எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் கிட்டத்தட்ட 15 பேருக்கு மர்ம காய்ச்சல் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.

விமானம் புறப்பட்ட போது ஒரு சிலருக்கு மாத்திரமே காய்ச்சல் இருப்பது தெரிய வந்துள்ள நிலையில் நியூயோர்க்கை வந்தடைவதற்கு முன்பு பலருக்கு இந்தக் காய்ச்சலால் பாதிக்கப் பட்டது தெரிய வந்ததை அடுத்து விமான ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

எனினும் விமான நிலைய அதிகாரிகளுக்கு அவர்கள் உடனடியாகத் தகவலை அனுப்பியுள்ளனர். எனினும் எமிரேட்ஸ் EK203 என்ற குறித்த விமானம் ஜோன் எஃப் கென்னெடி விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கப் பட்டது. உடனடியாக விரைந்த மருத்துவக் குழு பயணிகள் அனைவரையும் பரிசோதித்தனர். இதில் 19 பேருக்கு மர்மக் காய்ச்சல் இருப்பது கண்டறியப் பட்டதாகவும் 11 பேர் உடனடியாக மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆயினும் நியூயோர்க் நகர சுகாதார அமைச்சின் கமிசனர் ஆக்சிரிஸ் பார்பட் கூறுகையில் காய்ச்சல் இன்னமும் உறுதிப் படுத்தப் படவில்லை என்றும் சிகிச்சை பெற்று வருவோர் நலமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்