உலகம்

கடந்த 8 மாதங்களில் மலேசியாவில் சட்ட விரோதமாகக் குடியேறி அங்கு வேலை பார்த்து வந்த 30 000 இற்கும் அதிகமான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இது தவிர இவர்களை வேலைக்கு அமர்த்தியவர்களும், மலேசியாவுக்குள் கடத்தி வர முயன்றவர்களும் என ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இத்தகவலை மலேசியக் குடிவரவுத் துறை உறுதிப் படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 30 ஆம் திகதியுடன் மலேசியாவில் சட்ட விரோதமாகக் குடியேறி வேலை பார்ப்பவர்கள் தாமாகவே முன் வந்து சரணடைய அரசு விதித்த கெடுவும் நிறைவுற்றுள்ளது. இந்நிலையில் கைது செய்யப் பட்டவர்கள் அனைவரும் விரைவில் தத்தமது சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப் படுவர் என எதிர் பார்க்கப் படுகின்றது. மலேசிய அரசு கடந்த வருடம் முதற்கொண்டே வெளிநாட்டுத் தொழிலாளர்களை நெறிப் படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் கட்டுமானத் துறை, தேயிலைத் தோட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணி புரிவதற்காக குறைந்த ஊதியத்துக்கு ஆபத்தான கடுமையான வேலைகளில் மலேசிய நிறுவனங்கள் இவ்வாறான சட்ட விரோதக் குடியேறிகளை அமர்த்தி வருகின்றன. இதற்கு பொருளாதார ரீதியாகப் பின் தங்கிய நாடுகளில் இருந்து ஆட்கடத்தல் காரர்கள் வழியாக பொது மக்கள் அழைத்து வரப் படுகின்றனர். இந்த நிறுவனங்கள் இலாபத்தை மாத்திரமே இலக்காகக் கொண்டு செயற்படுவதால் தமது தொழிலாளர்களுக்கு எந்த வித ஆவணமும் அளிப்பதில்லை என்பதுடன் சில சமயங்களில் குறைந்தளவு ஊதியத்தைக் கூட வழங்காது தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்வதும் உண்டு.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

நல்லாட்சிக் காலத்தில் மாகாண சபைத் தேர்தலை அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே தடுத்து நிறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

“கடந்த நல்லாட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் உண்மையாகவே சுயாதீனமானவையா? இல்லையா? என்பது தொடர்பில் சிக்கல் ஒன்று உள்ளமையினால், அவை பற்றி ஆராய உயர் மட்டத்தில் சுயாதீன ஆணைக்குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த

9 முதல் 12 வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களை 30 சதவீதம் குறைக்க மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் கேட்டுள்ளது.

இந்தோனேசிய தீவின் ஜாவா கடற்கரையில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் அதிகாரிகள் வெளியிட்ட தகவல்களின்படி நிலநடுக்கம் காரணமாக எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என அறியவருகிறது.

தெற்காசிய நாடுகளில் இந்தியாவை அடுத்து மிக அதிக கொரோனா தொற்றுக்கள் கொண்ட நாடாக பாகிஸ்தான் விளங்குகின்றது.