உலகம்
Typography

நேபாலில் 1000 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ் வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 33 பேர் பலியாகியும் 43 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.

திங்கட்கிழமை சுமார் 76 பயணிகளுடன் தலைநகர் காத்மண்டுவில் இருந்து காகரேகோலா நோக்கிச் சென்று கொண்டிருந்த போது பிர்டாடோலி என்ற நகருக்கு அண்மையில் மலைப் பாதையில் தான் கட்டுப்பாட்டை இழந்து பஸ் விபத்துக்குள்ளாகி உள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு உடனே விரைந்த மீட்புக் குழுவினர் இராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு காத்மண்டு வைத்தியசாலை மற்றும் ஏனைய நகரங்களில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதித்தனர்.

சிகிச்சை பெறுபவர்களில் பலரின் நிலை மோசமான நிலையில் இருப்பதாகவும் இதனால் உயிரிழப்புக்கள் அதிகரிக்கலாம் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேபால் பிரதமர் பிரசண்டா ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். குறுகலான மலைப் பாதைகள் அதிகம் உள்ள நேபாலில் பயணம் செய்யும் பஸ் வண்டிகளின் நிலையோ அதை விட மோசமாகும். மோசமான பராமரிப்பைக் கொண்ட இந்த பஸ் வண்டிகளில் அளவுக்கு மீறி பயணிகள் பயணிப்பதும் சிலர் பஸ் வண்டிகளின் கூரைகளில் பயணிப்பதும் வாடிக்கை ஆகும். இதனால் உலகில் அதிகம் வாகன விபத்துக்கள் நடைபெறும் நாடுகளில் ஒன்றாகவும் நேபால் விளங்குவது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்