உலகம்
Typography

பெரு  நாட்டைத் தாக்கிய 5.3 ரிக்டர் நிலநடுக்கத்தில் ஒரு அமெரிக்க சுற்றுலாப் பயணி உட்பட 4 பேர் கொல்லப்  பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஞாயிறு இரவு தாக்கிய இந்நிலநடுக்கம் காரணமாக செப்பு உற்பத்தி செய்யும் பகுதி பாதிக்கப் பட்டுள்ளது.

கயில்லோமா மாகாணத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் ஆழத்தில்  ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து குறைந்தது 5 தொடர் அதிர்வுகள் பதியப் பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையமான USGS தெரிவித்துள்ளது. இந்த நில நடுக்கத்தால் நூற்றுக் கணக்கான வீடுகள் இடிந்து வீழ்ந்தும், மின் இணைப்புக்கள் துண்டிக்கப் பட்டும்  பல நகரங்களில் தொலைபேசி  சேவை கூட பாதிக்கப் பட்டும் உள்ளன. பெரு நாடு உலகில் பூகம்ப வலயத்தில் உள்ள நாடுகளில் ஒன்று என்பதால் அங்கு ஆண்டுக்கு ஒரு நிலநடுக்கம் ஏற்படுவது அங்கு வழக்கம் ஆகும். 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் பெருவைத் தாக்கிய பூகம்பத்தினால் இக்கா என்ற பகுதியில் நூற்றுக் கணக்கான மக்கள்  பலியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில்  8  பேர் பலியாகி உள்ளதுடன் 20 000 இற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மறுபுறம் ஜப்பானிலோ சாந்த்து என்ற தைஃபூன் புயல் தாக்கப் போவதாகவும் இது சக்தி வாய்ந்ததாக இருக்கும் எனவும் செவ்வாய்க்கிழமை அந்நாட்டு அரசு  முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த சாந்த்து புயல் மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்திலும் இருக்கும்  என ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS