உலகம்

 

பிரேசிலில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து முன்னாள் அதிபரான லூயீஸ் ஈனாஸ்யோ லூலா டா சில்வா விலகியுள்ளார்

72 வயதான லூலா தனது 12 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து வருகின்றார்.  இந்நிலையில் அவரது தொழிலாளர் கட்சியின் தற்போதைய தலைவர் கலெய்சி கோஃப்மன் இந்த முடிவை அறிவித்தார்.

லூலா மீதான ஊழல் குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் 2 வாரங்களுக்கு முன்னர்தான் பிரேசிலின் தேர்தல் மேல் நீதிமன்றம் அதிபர் தேர்தல் வேட்பாளராக போட்டியிடுவதில் இருந்து லூலாவை தடைவ்செய்ததுதீவிர வலதுசாரி அதிபர் வேட்பாளரான 63 வயதான ஜயீர் போல்சோனாரோ தனது பரப்புரை பேரணியில் கத்தியால் குத்தப்பட்ட சில நாட்களுக்கு பின், இந்த நடவடிக்கை வந்துள்ளது.

போல்சோனாரோவுக்கு பெரியதொரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்இந்நிலையில் லூலாவை விடுதலை செய்ய வேண்டுமென 5 மாதங்களாக சிறைக்கு வெளியே முகாமிட்டுள்ள அவருடைய ஆதரவாளர்களுக்கு அவரால் எழுதப்பட்டுள்ள கடிதம் ஒன்று வாசித்து காட்டப்பட்டது.

«அக்டோபர் 7ம் தேதி நடைபெறும் அதிபர் தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை» என்று ஜனவரி 2003 முதல் 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை பிரேசிலை ஆண்ட முன்னாள் அதிபர் இந்த கடிதத்தில் கூறியுள்ளார்மிக நீண்ட சட்ட போராட்டத்தின் முடிவில், அதிபர் தேர்தலில் போட்டியிட லூலா தகுதியில்லாதவர் என்று தேர்தல் மேல் நீதிமன்றம் ஆகஸ்ட் 31ம் தேதி அறிவித்த பின்னர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகும் தீர்மானத்தை லூலா எடுத்துள்ளார்.

லூலாவின் சட்டக்குழுவும், தொழிலாளர் கட்சியும் இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ள நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு இன்னும் வழங்கப்பட வேண்டியுள்ளது.திங்கள்கிழமை இரவு வரை இந்த அதிபர் தேர்தலில் லூலாவை போட்டியிட வைப்பதே தொழிலாளர் கட்சியின் திட்டமாக இருந்ததுலூலா சிறைப்படுத்தப்பட்ட பின்னரும், டேட்டாஃபோல்ஹா நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் 40 சதவீத மக்கள் லூலாவுக்கே வாக்களிப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பெரியதொரு ஊழல் திட்டத்தில் ஈடுபட்ட பொறியியல் நிறுவனம் ஒன்றிடம் இருந்து கையூட்டு பெற்றதாக 2017ம் ஆண்டு லூலா மீது குற்றம் உறுதிப்படுத்தப்பட்டதுதன் மீதான குற்றத்தை மறுத்த லூலா, இந்த தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்தார்.

கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பு வழங்கிய மேல் முறையீட்டு நீதிமன்றம், முந்தைய தீர்ப்பை உறுதி செய்ததோடு, முன்னர் வழங்கப்பட்ட ஒன்பதரை ஆண்டு சிறைதண்டனையை 12 ஆண்டாக உயர்த்தி அறிவித்ததுலூலா அடிப்படையில் இடதுசாரி தத்துவக் கொள்கைகளை கொண்டவரும், ஏழ்மையிலிருந்து படிப்படியாக முன்னுயர்ந்து தொழிலாளர் நலனுக்காக போராடியவரும் ஆவார்.

இவருக்குப் பதிலாக இவருடைய கட்சியின் ஹதாத் அதிபர் பதவிக்கு போட்டியிடவுள்ளதுடன் லூலாவின் ஆதரவு இவருக்கு இருக்கப் போகிறது. எனினும் மக்களின் செல்வாக்கு ஹதாத்துக்கும் கிடைக்குமா என்பது சந்தேகமே.

லூலாவின் திடீர் பின்வாங்கலுக்கு, அவர் சட்டரீதியாக அதிபர் பதவியில் போட்டியிட முடியாத நிலைமை இருப்பதே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இநிந்லையில் அதிபர் பதவிக்கு அவரது கட்சி சார்பில் வேறு யாரும் பரிந்துரைக்கப்படாவிடின், குறிப்பிட்ட திகதிக்குள் அதிபர் தேர்தல் போட்டியாளர் பரிந்துரை காலியாகிவிடும் எனும் அச்சம் காரணமாகவே, லூலா பின்வாங்கியதுடன், அவருக்கு பதில் ஹதாத் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கையில் நேற்று வெள்ளிக்கிழமை மாத்திரம் 297 பேர் கொரோனா வைரஸ் தொற்றோடு அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

“சிறு பிள்ளைகளின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த சைனைட் குப்பிகளை அகற்ற முடிந்தமையை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் பொருளாத பாதிப்பு கொரோனா நோய்த்தொற்று நேருக்கடியால் இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளதாக ரிசர்வு வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று அதிகரிப்பால் மராட்டிய மாநிலத்தை அடுத்து தமிழ்நாட்டில் அதிக பாதிப்பை கொண்டுள்ளது. இந்நிலையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா உறுதி ஆனது.

சுமார் $23.11 பில்லியன் டாலர் பெறுமதியான Stealth aircraft எனப்படும் நவீன 105 F-35 ரக போர் விமானங்களை ஜப்பானுக்கு விற்க உடன்பட்டிருப்பதாக அமெரிக்கா வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

நேபாளத்தின் சமீப நாட்களாகக் கனமழை பெய்து வருகின்றது. இக்கனமழை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் அடங்கலாக 12 பேர் பலியாகி இருப்பதாகவும், மேலும் 19 பேர் காணாமல் போயிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.