உலகம்

2015 ஆமாண்டு தொடக்கம் முதல் யேமெனில் ஹௌத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான வளைகுடா கூட்டணி நாடுகள் போர் தொடுத்து வருகின்றன.

இதில் மோதல் முற்றிய போது யேமென் அதிபர் அப்துல் மன்சூர் ஹைதி நாட்டை விட்டுத் தப்பிச் சென்றார். இந்த உள்நாட்டுப் போரில் இதுவரை 10 000 பேர் கொல்லப் பட்டும் 55 000 பேரு காயம் அடைந்தும் உள்ளதாக ஐ.நா தெரிவிக்கின்றது.

இந்நிலையில் தற்போது யேமெனில் மொத்தம் 52 இலட்சம் குழந்தைகள் பட்டினியால் பாதிக்கப் பட்டுள்ளனர். உள்நாட்டுப் போர் காரணமாக அதிகரித்துள்ள உணவுப் பொருட்கள் விலை மற்றும் யேமெனின் நாணய மதிப்பு வீழ்ச்சி போன்ற சிரமங்களால் தான் பல குடும்பங்களும், குழந்தைகளும் பஞ்சத்தாலும் வறுமையாலும் பாதிக்கப் பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் யுத்தத்தின் பின் யேமெனில் உணவுப் பொருட்களின் விலை 68% வீதம் அதிகரித்துள்ளது.

மேலும் கிளர்ச்சியாளர் பிடியில் உள்ள பகுதிகளுக்கு நுழைவாயிலாக உள்ள யேமெனின் முக்கிய துறைமுக நகரான ஹுடேடாவில் மோதல் நடைபெற்று வருவதால் இந்நகருக்கு உணவுப் பொருட்கள் கொண்டு வரப்படுவதில் சிரமம் உண்டாகியுள்ளது.