உலகம்
Typography

மியான்மாரின் ஆளும் கட்சித் தலைவர் ஆங் சான் சூ சி 4 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு சீனாவுக்குச் சென்றுள்ளார். இப்பயணத்தின் முக்கிய நோக்கமாக மியான்மார் மற்றும் சீன எல்லைகளில் இயங்கி வரும் சிறுபான்மை  குழுக்களுடன் நீடித்து வரும் நீண்ட கால மோதலை முடிவுக்குக் கொண்டு வருதல் என்பது அமையவுள்ளது.

மேலும் 2011 இல் மியான்மாரில் இராணுவ ஆட்சியின் போது உள்ளூர் பிரதேசங்களில் இருந்து கிளம்பிய பலத்த எதிர்ப்பினால் மியான்மாரின் வடக்கு பகுதியில் கட்டப் படவிருந்த அணைத் திட்டம் கைவிடப் பட்டது. இந்நிலையில் இம்முறை சீன அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் பிரதமர் லீ கெக்கியாங் ஆகியோரை ஆங் சான் சூ சி சந்தித்துப் பேசும் போது இந்த அணைத் திட்டம் குறித்தும் விவாதிப்பார் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப் படுகின்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS