உலகம்
Typography

தென் சீனக் கடலில் நிலவி வரும் பதற்றத்தைத் தவிர்ப்பதற்காக சீனாவும் ஏசியான் (ASEAN) அமைப்பிலுள்ள தென் கிழக்கு  ஆசிய நாடுகளும் இணைந்து புதிய சட்ட  வரைவை அடுத்த வருடம் ஸ்தாபிக்கவுள்ளன.

இத்தகவலை சீன உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. கடந்த 2010 ஆம் ஆண்டு  முதலே சீனாவும் ஏசியான் அமைப்பிலுள்ள 10 உறுப்பு நாடுகளும் போக்குவரத்துக்கான மிகவும் பரபரப்பான கடல் நீரோட்டம் நிலவும் தென்சீனக் கடலில் பதற்ற நிலையைத்  தவிர்க்க விவாதித்து வந்துள்ளன.

கடந்த மாதம் ஹாகுவே நாட்டிலுள்ள நீதிமன்றம் ஒன்று தென் சீனக் கடலில் உரிமை கொண்டாட வரலாற்று  ரீதியிலான ஆதாரம் சீனாவிடம் இல்லை என்றும் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கே குறித்த பகுதியின் உரிமை சென்று சேர வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கி இருந்தது. இத்தீர்ப்பை வன்மையாக எதிர்த்த சீனா குறித்த நீதிமன்றத்தை நிராகரித்தது.

ஆனால்  அதன் பின்னர் இவ்விவகாரத்தில்  சற்று  இணங்கிப் போக ஆரம்பித்தது சீனா. மேலும் தென் சீனக் கடலில் பதற்றத்தைத் தோற்றுவிக்க அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகியவையும் காரணம் என சாடியுள்ளது. தென் சீனக் கடலில் $5 டிரில்லியன் டாலர் வருமானம் வருடாந்தம் கிடைத்து வருகின்றது. மிக அதிக சக்தி வளம் உடைய தென் சீனக் கடலை புரூனே,மலேசியா,பிலிப்பைன்ஸ்,தாய்வான் மற்றும் மியான்மார் ஆகிய நாடுகளும் சொந்தம் கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS