உலகம்
Typography

தென்மேற்கு ஆசிய நாடான ஜோர்டானில் அண்மையில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 11 பேர் பலியாகி உள்ளனர்.

தலைநகர் அமானின் தென்மேற்கே மடாபாவில் வெள்ளம் காரணமாக சிலர் அடித்துச் செல்லப் பட்டுள்ளனர். அக்கபா நகரில் பெய்த கனமழை காரணமாக அங்கு அவசர நிலை பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது.

சுமார் 4000 சுற்றுலாப் பயணிகள் பழம்பெரும் நகரான பெட்ராவை விட்டு வெளியேற்றப் பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். முன்னதாக சாக்கடலில் ஏற்பட்ட வெள்ளத்தில் குழந்தைகள் உட்பட 21 பேர் அடித்துச் செல்லப் பட்டு இரு வாரங்களுக்குள் இந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பெட்ராவி வெள்ள நீர் மட்டம் 4 மீட்டர் உயரத்தில் இருந்ததாகக் கூறப்படுகின்றது.

மறுபுறம் அமெரிக்க கலிபோர்னியா மாநில காட்டுத் தீக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்வடைந்துள்ளது. வன நிர்வாகம் மிக மோசமானது தான் இதற்குக் காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இதுவரை கலிபோர்னிய காட்டுத் தீயில் பல ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலம் நாசமாகி உள்ளது. பல இடங்களில் சாம்பலுக்கு மத்தியில் மக்கள் நடமாடும் நிலை ஏற்பட்டுள்ளது. வரலாற்றில் மிக மோசமான இந்தக் காட்டுத் தீயில் இதுவரை 6700 இற்கும் அதிகமான வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன.

3200 இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் காட்டுத் தீயை அணைக்கப் போராடி வரும் நிலையில் அதிபர் டிரம்ப் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், இவ்வாறு கூறியுள்ளார். 'வனத்துறை நிர்வாகம் மிக மோசமாகி விட்டது. ஒவ்வொரு ஆண்டும் வனத்துறைக்கு பல நூறு கோடி டாலர்கள் கொடுக்கப் பட்டு வருகின்றது. ஆனாலும் உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. இதற்குக் காரணம் வனத்துறையின் தவறான நிர்வாகம் தான்.' என்றுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்