உலகம்
Typography

வரலாற்றில் மிக மோசமான காட்டுத் தீ அனர்த்தமாகப் பதிவு செய்யப் பட்டுள்ள அண்மைய கலிபோர்னியா காட்டுத் தீக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளதுடன் இதுவரை 600 பேருக்கும் அதிகமானவர்கள் காணாமற் போயுமுள்ளனர்.

முக்கியமாக கலிபோர்னிய மாநிலத்தின் சியெர்ரா நெவேடா மலை அடிவாரம் அதன் தெற்கு மற்றும் வடக்கு குடியிருப்பு பகுதிகளை கடும் காட்டுத் தீ சூழ்ந்துள்ளது. காட்டுத் தீ கடும் வீரியமாக இருப்பதால் அதனை அணைக்கும் பணி மீட்புப் பணியாளர்களுக்குக் கடும் சிரமமாக உள்ளது. இதுவரை 8000 இற்கும் அதிகமான வதிவிடங்கள் தீக்கு இரையாகி உள்ளன. மேலும் தமது கார்கள் மூலம் குறித்த பகுதிகளில் இருந்து வெளியேறிய பல நூற்றுக் கனக்கான குடும்பத்தினர் தங்குமிடமின்றித் தமது வாகனத்துக்குள்ளேயே உறங்கி வருகின்றனர்.

பலியான 63 பேரிலும் கிட்டத்தட்ட 12 சடலங்களே மீட்கப் பட்டுள்ளன. வியாழக்கிழமை மாத்திரம் 130 பேர் காணாமற் போயுள்ள நிலையில் இதுவரை கணாமற் போயுள்ள அனைத்து மக்களிலும் பெரும்பாலானவர்கள் தீயில் சிக்கி இறந்திருக்கலாம் என அஞ்சப் படுவதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்