உலகம்
Typography

தீவிரவாதத்துக்கு ஆதரவாக தீவிரவாதத்தை ஊக்குவித்து கருத்துக்களை வெளியிட்டு செயல்பட்ட 3 லட்சத்து 60 ஆயிரம் முக நூல் கணக்குகளை முகநூல் நிறுவனம் முடக்கி உள்ளது. 

முகநூல், ட்வீட்டர் கணக்குகள் மூலம் தீவிரவாத ஊக்குவித்தல் அதிகரித்து வருகிறது என்றும், இதன் மூலம் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, பொது மக்கள் மீதுத் தாக்குதல் நடத்துவது என்பது உலகம் முழுவதிலும் இப்போது பெருகிவிட்டது என்கிற குற்றச்சாட்டும்  எழுந்தது. இதையடுத்து விழித்துக்கொண்ட முகநூல் நிறுவனம் முகநூலை தீவிரவாதத்துக்கு ஆதரவாக பயன்படுத்திய  3 லட்சத்து 60 ஆயிரம் பேரின் கணக்குகளை முடக்கி உள்ளதாகத் தகவல் வெளியிட்டுள்ளது.

சமூக வலைத் தலமான ட்வீட்டர் நிறுவனமும் தீவிரவாதத்துக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் கணக்குகளை முடித்து வைத்து வருவதாகத் தகவல் வெளியிட்டு உள்ளது.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS