உலகம்
Typography

உலகின் மிகப் பிரசித்தமான சமூக வலைத் தளமான ஃபேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் அதன் தலைமைச் செயலதிகாரியுமான மார்க் சூக்கர்பர்க் பதவி விலகக் கோரி அந்நிறுவன முதலீட்டாளர்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.

அமெரிக்கவில் குடியரசுக் கட்சிக்குச் சொந்தமான மக்கள் தொடர்பு அரசியல் ஆலோசனை நிறுவனத்தை பணிக்கு அமர்த்தி அதன் எதிரிகள் மீது அவதூறுகளைப் பரப்பிய குற்றச் செயலை ஃபேஸ்புக் நடத்தியதாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

இதையடுத்தே மார்க் சூக்கர்பர்க் பதவி விலக வேண்டும் என முதலீட்டாளர்கள் நெருக்கடி அளிக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தன் மீது சுமத்தப் பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக உடனடியாக செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்த மார்க் சூக்கர்பர்க் குறித்த டிரிலியம் அசெட் மேனெஜ்மென்ட் என்ற நிறுவனம் குறித்துத் தனக்கு எந்தவித முன் தகவலும் தெரியாது என்று கூறியுள்ளார். மேலும் நியூயோர்க் டைம்ஸில் செய்தி வெளியான உடனேயே இது குறித்துத் தனது நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி குறிப்பிட்ட நிறுவனத்துடன் எதிர்காலத்திலும் எந்தவித செயற்பாட்டையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் மார்க் சூக்கர்பர்க் அறிவுறுத்தியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்