உலகம்
Typography

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அண்மைக் காலத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களில் மிக மோசமானதாகக் கருதப் படும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்று செவ்வாய்க்கிழமை அங்கிருக்கும் மதத் தலைவர்கள் கூட்டத்தின் மீது நடத்தப் பட்டுள்ளது.

காபூல் விமான நிலையத்துக்கு அருகே நடத்தப் பட்ட இத்தாக்குதலில் பலி எண்ணிக்கை 50 ஐத் தாண்டியுள்ளது.

காயமுற்ற 80 இற்கும் அதிகமானவர்களில் 40 பேர் மிக மோசமான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இத்தற்கொலைத் தாக்குதல் குறித்து காபூல் அவசர சேவை வைத்திய சாலையின் அதிகாரிகள் கூறுகையில், சம்பவம் நடைபெற்ற சில நிமிடங்களுக்குள் குறித்த இடத்துக்குக் கிட்டத்தட்ட 30 ஆம்புலன்ஸ் வண்டிகள் அனுப்பப் பட்டு மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் பட்டதாகத் தெரிவித்துள்ளனர். ஒரு திருமண மண்டபத்துக்குள் நடந்து கொண்டிருந்த இந்த வைபவத்தின் போது இஸ்லாமியர்கள் தமது இறை தூதர் முகமது நபியின் பிறந்த நாள் அனுசரிப்பில் ஈடுபட்டுக் கொண்டு இருந்துள்ளனர்.

சமீப காலமாக ஆப்கானில் இடம்பெற்று வந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவங்களுக்கு ISIS அமைப்பு பொறுப்பேற்று வந்திருந்த போதும் இன்றைய தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்