உலகம்
Typography

செவ்வாய்க்கிழமை சுவிட்சர்லாந்தின் IMD வணிகக் கல்லூரியால் வெளியிடப் பட்ட பூகோள அபிவிருத்தி, ஈர்ப்பு மற்றும் திறமையான நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் (Global Talent Ranking) சுவிட்சர்லாந்து தொடர்ந்து 5 ஆவது ஆண்டும் முதலிடத்தில் உள்ளது.

இதற்கடுத்த 5 இடங்களில் டென்மார்க், நோர்வே, ஆஸ்ட்ரியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.

இப்பட்டியலில் 2017 ஆமாண்டு 55 ஆவது இடத்தில் இருந்த இந்தியா இரு இடங்கள் பின்னுக்குத் தள்ளி இவ்வருடம் 53 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. சுமார் 63 நாடுகள் எடுத்துக் கொள்ளப் பட்ட இந்தத் தரவரிசைப் பட்டியலில் ஆசிய நாடுகளில் சிங்கப்பூரே முதன்மையாக அதாவது 13 ஆவது இடத்தில் உள்ளது. உலகின் வலிமையான பொருளாதார சக்திகளில் 2 ஆவதான சீனாவோ இந்தப் பட்டியலில் 39 ஆவது இடத்தில் உள்ளது.

இத்தரவரிசைகள் அனைத்தும் ஒரு நாட்டின் முதலீடு, அபிவிருத்தி, முறையீடு மற்றும் தயார் நிலை ஆகிய வகைகள் மூலமே கணிக்கப் படுகின்றது. இதில் ஐரோப்பாவைத் தவிர்த்துப் பார்த்தால் முதல் பத்து இடங்களுக்குள் 6 ஆவது இடத்தில் கனடா உள்ளது. இப்பட்டியலின் இறுதி இடத்தில் வெனிசுலா 63 ஆவது இடத்தில் உள்ளது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்