உலகம்
Typography

அமெரிக்காவின் சிக்காக்கோ நகரிலுள்ள மருத்துவ மனையில் சமீபத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் போலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட 3 பேர் பலியாகி உள்ளனர்.

சிக்காக்கோவின் மெர்சி என்ற மருத்துவமனை வாசல் அருகே பதுங்கி இருந்து மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதில் முதலில் பெண் டாக்டர் ஒருவர் பலியானார்.

மேலும் மற்றொரு பெண் காயமடைந்தார். விரைந்து வந்த போலிசார் சம்பவ இடத்தைச் சுற்றி வளைத்தனர். துப்பாக்கி தாரியைப் பிடிக்க நடைபெற்ற துப்பாக்கிச் சமரில் குறித்த மர்ம நபர் சுட்டதில் சாமுவேல் என்ற போலிஸ் அதிகாரி ஒருவரும் மருத்துவ மனை ஊழியர் ஒருவரும் கொல்லப் பட்டனர். எனினும் விரைவில் நிலமையைப் போலிசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர். குறித்த மர்ம நபர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது போலிசாரின் துப்பாக்கிச் சூட்டினால் இறந்தாரா என்பது குறித்துத் தெளிவான தகவல் இன்னமும் வரவில்லை.

எனினும் கொல்லப் பட்ட பெண் டாக்டர் மர்ம நபரின் முன்னால் காதலி என்று தெரிய வந்துள்ளது. தற்போது மருத்துமனையினுள் மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப் பட்டுள்ளதாக போலிசார் தகவல் அளித்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS