உலகம்
Typography

அண்மையில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரவாதத்துக்கு ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தானுக்கு இனிமேலும் நிதியுதவி வழங்க முடியாது எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாகவே பாகிஸ்தானில் சுதந்திரமாகச் செயற்பட்டு வரும் தீவிரவாத அமைப்புக்களை ஒடுக்க வேண்டும் எனப் பாகிஸ்தான் அரசுக்கு அமெரிக்காவும் மேற்குலகும் அதிக அழுத்தம் தெரிவித்து வருகின்றன.

ஆனால் சமீபத்தில் பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற பின்னும் கூட இவ்விடயத்தில் மிக உறுதியான நடவடிக்கையை பாகிஸ்தான் அரசு எடுக்காது தாமதித்து வருகின்றது. இந்நிலையில் தான் வெள்ளை மாளிகையில் இருந்து இது தொடர்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மிகவும் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் தொடர்ச்சியான நிர்ப்பந்தத்துக்கு மத்தியிலும் தீவிரவாதத்தை அடக்கி ஒடுக்க பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எதையும் எடுக்காத பட்சத்தில் அந்நாட்டுக்கு வருடாந்தம் இராணுவ நிதியுதவியாக வழங்கப் பட்டு வரும் ரூ 9360 கோடி பணத் தொகையை வழங்க முடியாது என்றுள்ளார். மேலும் ஏற்கனவே பாகிஸ்தானின் அபோட்டாபாதில் அல்கொய்தா இயக்கத் தலைவன் ஒசாமா பின்லேடன் பதுங்கி இருந்ததைத் தமக்குத் தெரிந்திருந்தும் பாகிஸ்தான் அரசு காட்டிக் கொள்ளவில்லை என்றும் இது போன்று தீவிரவாதத்தை ஒழித்துக் கட்டாது அதற்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தானுக்கு இனிமேலும் நிதியுதவி அளிக்க முடியாது என்றும் டிரம்ப் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்