உலகம்
Typography

நவம்பர் 14 ஆம் திகதி நியூசிலாந்தைத் தாக்கிய 7.8 ரிக்டர் கொண்ட வலுவான நிலநடுக்கம் இரு தீவுகளைப் பல மீட்டர்களுக்கு அண்மையாக இணைத்துள்ளதாகவும் இரு வருடங்களுக்கு முன்பு நியூசிலாந்தைத் தாக்கிய மிக வலிமையான நிலநடுக்கங்கள் காரணமாக அதன் பிரதான தீவுகள் ஒன்றுடன் ஒன்று நெருங்கியும் விலகியும் வந்துள்ளதாகவும் இதனால் ஒரு முக்கிய நகரமே கடலில் மூழ்கி விட்டதாகவும் புவியியலாளர்கள் கூறியுள்ளனர்.

தீவுகளால் ஆன நாடான நியூசிலாந்தின் வடக்குத் தீவின் கீழ்ப் பாகத்தில் இருக்கும் அதன் தலைநகரமான வெலிங்டன் கேப் கம்பெல் எனப்படும் நிலநடுக்க கோடுகளால் தாக்கப் பட்ட பகுதியில் இருந்து 50 இற்கும் அதிகமான கிலோ மீட்டர்கள் தொலைவில் தான் உள்ளது. 2016 நிலநடுக்கங்கள் விளைவாக சுமார் 25 வலிமையான நிலக்கோடுகள் ஏற்பட்டதாகவும் இந்த மாற்றம் இதுவரை அவதானிக்கப் பட்ட நிலநடுக்கங்களிலேயே சிக்கலான மாற்றம் எனவும் புவியியலாளர் றொப் லாங்க்ரிட் தெரிவித்துள்ளார்.

பசுபிக் சமுத்திரத்தின் நெருப்பு வளையம் எனப்படும் ரிங் ஆஃப் ஃபைர் என்ற வலயத்தில் அமைந்துள்ள நியூசிலாந்தில் வருடாந்தம் 15 000 இற்கும் அதிகமான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஆனால் இவற்றில் சுமார் 100 முதல் 150 வரையிலான நிலநடுக்கங்களே உணரத்தக்களவு வலிமையானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மிக இந்தியாவின் இமாலயப் பிரதேசம் மற்றும் அதன் தலைநகர் டெல்லியை மையமாகக் கொண்டு மிக வலிமையான நிலநடுக்கம் சில ஆண்டுகளில் தாக்கலாம் எனவும் இதனால் நியூடெல்லியில் கடுமையான சேதம் ஏற்படலாம் எனவும் புதிய புவியியல் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. 2001 ஆமாண்டு இந்தியாவின் குஜராத் மாநில பூஜ் என்ற பகுதியில் தாக்கிய மிக வலிமையான நிலநடுக்கம் காரணமாக சுமார் 10 000 இற்கும் அதிகமான பொது மக்கள் பலியானமை குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS