உலகம்

வட அமெரிக்கக் கண்டத்தில் அமெரிக்காவுக்கு அருகே உள்ள நாடான மெக்ஸிக்கோவின் அதிபராக இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த மேனுவேல் லோபெஸ் ஆப்ரடார் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

ஜுலையில் மெக்ஸிக்கோவில் அதிபர் பதவி, பாராளுமன்றம் மற்றும் 3000 பிராந்திய பதவிகளுக்காக நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலமே ஆப்ரடார் மெக்ஸிக்கோ அதிபராகத் தேர்வாகியுள்ளார்.

முன்னால் அதிபராக இருந்த பெனா நெய்டோவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்கள் குவிந்ததால் எதிர் பார்க்கப் பட்டது போலவே அவரின் ஐ ஆர் பி கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது. மேலும் இதே ஐ ஆர் பி கட்சியில் இருந்து பிரிந்து சென்று இடதுசாரிக் கொள்கைகளுடன் இரு கட்சிகளின் கூட்டணியுடன் லோபெஸ் ஆப்ரடாரால் அமைக்கப் பட்ட தேசிய ரீ ஜெனரேசன் கட்சி வெற்றியைத் தனதாக்கியுள்ளது. சுமார் 53% வீத வாக்குகளுடன் வெற்றி பெற்ற லோபெஸ் ஆப்ரடார் மெக்ஸிக்கோவை கடந்த 89 ஆண்டுகளாக ஆண்டு வந்த இரு முக்கிய கட்சிகளைத் தோற்கடித்தவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கையைக் கடுமையாக ஆப்ரடார் விமரிசித்து வந்த போதும் இவரது வெற்றிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இன்று பதவியேற்றுக் கொண்ட ஆப்ரடார் பொது மக்களிடம் பொய் சொல்ல மாட்டேன், திருட மாட்டேன் மற்றும் ஏமாற்ற மாட்டேன் என வாக்குறுதி அளித்தார்.

 

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

நல்லாட்சிக் காலத்தில் மாகாண சபைத் தேர்தலை அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே தடுத்து நிறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

“கடந்த நல்லாட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் உண்மையாகவே சுயாதீனமானவையா? இல்லையா? என்பது தொடர்பில் சிக்கல் ஒன்று உள்ளமையினால், அவை பற்றி ஆராய உயர் மட்டத்தில் சுயாதீன ஆணைக்குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

கொரோனா நோய்த்தொற்று இந்தியாவில் அசுர வேகத்தில் பரவி வருவதால் இத் தொற்றால் மொத்தம் பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சம் 42 ஆயிரத்தை கடந்துள்ளது. எனினும் மும்பை நகரத்தின் தாராவியில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த

இந்தோனேசிய தீவின் ஜாவா கடற்கரையில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் அதிகாரிகள் வெளியிட்ட தகவல்களின்படி நிலநடுக்கம் காரணமாக எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என அறியவருகிறது.

தெற்காசிய நாடுகளில் இந்தியாவை அடுத்து மிக அதிக கொரோனா தொற்றுக்கள் கொண்ட நாடாக பாகிஸ்தான் விளங்குகின்றது.