உலகம்

பிரான்ஸில் எரிபொருள் விலை உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடைபெற்றுவந்த நிலையில் விலை உயர்வை கைவிட முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மூன்று வாரங்களாக தொடரப்பட்டு வரும் இப்போராட்டத்தில் போலிசாருக்கும் போராட்டக் காரர்களுக்கும் இடையே மோதல்கள் அதிகரித்து பிரான்சின் முக்கிய நகரங்களில் கணிசமான சேதங்களை ஏற்படுத்தியிருந்தது. அதோடு மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து எரிபொருளுக்கான வரி விதிப்பை அடுத்தாண்டு பட்ஜெட்டில் இருந்து கைவிடுவதாக பிரான்ஸ் அரசு அறிவித்திருக்கிறது.
முன்னதாக பிரதமர் எய்ட்வார் ஃபிலிப் ஆறு மாத காலம் இடைநிறுத்துவதாக உறுதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இதனை கைவிடுவதாக அறிவித்துள்ளார்.

மஞ்சள் ஜேக்கட் என்றழைக்கப் பட்ட இப்போராட்டம், முதலில் டீசல் விலை அதிகரிப்பைக் கண்டித்து ஆரம்பித்தாலும் பின்பு வாழ்க்கைச் செலவின உயர்வு மற்றும் மக்ரோனின் பிற கொள்கைகளால் பாதிக்கப் பட்டவர்களும் இணைந்ததால் விரிவடைந்திருந்தது. சனிக்கிழமை பிரான்ஸ் முழுதும் 1600 இடங்களில் இடம்பெற்ற போராட்டத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பங்கு பற்றியிருந்தது குறிப்பிடதக்கது.