உலகம்

தென்கிழக்கு ஈரானில் துறைமுக நகரமான சபாஹார் நகரில் பொலிஸ் தலைமையகத்திற்கு வெளியே
தற்கொலைத் தாக்குதல் நடாத்தப்பட்டது.

இதில் குறைந்தது இருவர் உயிரிழந்ததோடு பல பொலிஸார் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சபாஹார் சிங்கன்-பெலுசிஸ்தான் மாகாணத்தில் அமைந்திருக்கிறது. கார் மூலம் வெடிகுண்டு வெடித்த உடனேயே, துப்பாக்கி ஏந்தியவர்கள் பொலிஸ் தலைமையகத்தைத் தாக்க முயன்றனர், ஆனால் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டதாக, ஈரானிய ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது. இத்தாக்குதலில் பொதுமக்கள் சிலரும் காயமடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

பாக்கிஸ்தானை தளமாகக் கொண்ட பெலுசி பிரிவினைவாதிகளும், சுன்னி முஸ்லீம் பயங்கரவாதிகளும் ஷியைட் அதிகாரிகளை குறிவைத்து எல்லை தாண்டி தாக்குதல்களை நடத்திவருவது குறிப்பிடதக்கது.