உலகம்
Typography

சீனாவின் பன்னாட்டு தொலைத் தொடர்பு நிறுவனமான ஹுவாய் இன் அதிபர் ரென் ஜெங்பெய் இன் மகளும் அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியுமான மெங்வான்ஜவ் கனடாவில் கைது செய்யப் பட்டுள்ளார்.

இவரை உடனே விடுவிக்காவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என சீனா கனடாவுக்குப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில் தான் டிசம்பர் முதலாம் திகதி கனடாவின் வான்கூவர் நகரில் இவர் கைது செய்யப் பட்டுள்ளதாகவும் இதற்கு முக்கிய காரணமாக ஹுவாய் மாபைல் தயாரிப்பு நிறுவனம் அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளை மீறி வடகொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்குத் தனது தயாரிப்புக்களை விற்பனை செய்தமை என்பதும் கூறப்படுகின்றது. மேலும் இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் ஒவ்வொன்றுக்கும் இவருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் படவும் வாய்ப்புள்ளது என்றும் தெரிய வருகின்றது.

இந்நிலையில் மெங்வான்ஜவ் கைது செய்யப் பட்டிருப்பது மனித உரிமை மீறலாகும் என சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வான்கூவர் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆஜர் படுத்தப் பட்ட இவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவது தொடர்பில் 6 மணித்தியால விசாரணை இடம்பெற்றுள்ளது. மெங்வான்ஜவ் சார்பான மனுவையும் சேர்த்து திங்கட்கிழமை விசாரணை நடைபெறுகின்றது.

இந்நிலையில் தனது எச்சரிக்கையை சீன வெளியுறவுத் துறை மந்திரி லீ யுசெங் பீஜிங் கனடா தூதரகத் தூதருக்குத் தெரியப் படுத்தியுள்ளதுடன் ஊடகங்கள் வாயிலாகக் கடும் எச்சரிக்கையும் விடுக்கப் பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்