உலகம்

 இன்று துருக்கியில் அதிவேக ரயில் மற்றொரு என்ஜின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர். 

இன்று காலை அதிவேக ரெயில் ஒன்று 206 பயணிகளுடன் துருக்கி தலைநகர் அங்காராவில் இருந்து மத்திய துருக்கியின் கொன்யா நோக்கி புறப்பட்டது.

புறப்பட்ட சில நிமிடங்களில் மர்சாண்டிஸ் ரயில் நிலையத்தினுள் நுழைந்தபோது, திடீரென அதே பாதையில் சென்றுகொண்டிருந்த ரயில் என்ஜின் மீது பயங்கரமாக மோதியது.

இதனையடுத்து ரயிலின் சில பெட்டிகள் தடம்புரண்டு ஒன்றுடன் ஒன்று மோதியதுடன் ஒரு பெட்டி இரும்பினால் அமைக்கப்பட்டிருந்த நடைமேம்பாலத்தின் மீது மோதி. இதனால் அந்த மேம்பாலமும் உடைந்தது. இதில் 9 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 47 பேர் பேரும் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.