உலகம்

யேமெனில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு யுத்த நிறுத்தத்தை அமுல் படுத்துவது என துறைமுக நகரான ஹொடைடாவில் சவுதி அரசும் கிளர்ச்சியாளர்களும் ஒப்புக் கொண்டிருந்தனர்.

யேமென் உள்நாட்டுப் போரில் பட்டினியால் வாடும் இலட்சக் கணக்கான மக்களுக்கு உணவு உட்பட அத்தியாவசியப் பொருட்கள் சென்று சேரக் கூடிய மிக முக்கியமான நுழைவாயில் ஹொடைடா ஆகும். இந்நிலையில் அங்கு யுத்த நிறுத்தம் அறிவிக்கப் பட்டு சில நிமிடங்களுக்குள் தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பது சர்வதேசத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியமாக கிழக்கு ஹொடைடாவில் கிளர்ச்சியாளர்கள் அரச படைகள் மீது ஷெல் வீச்சுத் தாக்குதல் நடத்தியதாகத் தெரிய வருகின்றது. முன்னதாகக் கடந்த வியாழக்கிழமை சுவீடனில் ஐ.நா சபை சார்பில் யேமெனில் யுத்தத்தில் ஈடுபட்டு வரும் இரு தரப்பும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருந்தன. இதன் போதே யுத்த நிறுத்தத்தை எட்டுவது என இணக்கம் ஏற்பட்டிருந்தது. ஆனாலும் யேமெனில் மோதல்கள் இடம்பெறுவது நிற்குமாறு தெரியவில்லை.