உலகம்

அண்மையில் அமெரிக்க செனட் சபையில் பத்திரிகையாளர் கசோக்ஜியின் கொலைக்கு சவுதி அரசின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மானின் மீது குற்றம் சுமத்தித் தீர்மானம் கொண்டு வரப்பட்டிருந்தது.

மேலும் யேமென் உள்நாட்டுப் போரில் சவுதிக்கு அமெரிக்கா அளிக்கும் ஆதரவையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வாக்களிப்பு நடத்தப்பட்டு ஏகமனதாகத் தீர்மானிக்கப் பட்டது. இவ்விரு நடவடிக்கைகளும் பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அமெரிக்கா மேற்கொண்ட செயல்கள் என சவுதி வெளியுறவு அமைச்சகம் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளது.

சவுதியின் அடாவடியான செயல்களுக்கு எதிரான அமெரிக்க மக்கள் மற்றும் அவர்களின் பிரநிதிகளான எம்பிக்களின் கோபத்தை அதிபர் டிரம்புக்கு வெளிக்காட்டும் நோக்கிலானது தான் செனட்டின் இந்நடவடிக்கை என்று கருதப்படும் நிலையில் கடந்த வியாழன் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம் சட்டமாவதற்கு வாய்ப்பில்லை எனவும் கருதப்படுகின்றது. சவுதியின் இந்த கண்டன நடவடிக்கைக்கு அமெரிக்கா இதுவரை பதிலளிக்கவில்லை.

ஆயினும் அமெரிக்காவின் 1973 போர் அதிகார சட்டத்தைப் பயன்படுத்தி நிறைவேற்றப் பட்ட முதல் தீர்மானமாகக் கருதப் படும் செனட் சபையின் இந்நடவடிக்கையில் டிரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களும் பலரும் கூட வாக்களித்து 56-41 என்ற கணக்கில் நிறைவேற்றப் பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் நிறுவப்பட்டுள்ள புதிய ஜனாதிபதி செயலணிகள் இரண்டினது அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் காணப்படுவதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. 

கேகாலையில் ஆரம்பமான பயிர்களை தாக்கும் மஞ்சள் புள்ளிகளைக் கொண்ட வெட்டுக்கிளிகள் மேலும் பல மாவட்டங்களுக்கு வியாபித்துள்ள நிலையில், பாலைவனத்தில் காணப்படும் வெட்டுக்கிளிகள் இலங்கைக்கு வரக்கூடிய அனர்த்தம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2,36,657 கொரோனா பாதிப்பாளர்கள் இந்தியாவில் இன்று பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அதோடு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.

இந்தியா சீனா எல்லைப்பிரச்சனை குறித்து இரு நாட்டு அதிகாரிகளுக்கிடையில் இன்று பேர்ச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும் இரு நாடுகளும் அமைதிப் பேர்ச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண சம்மதித்திருப்பதாவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கப்பட்டு வருகின்ற நிலையில், அடுத்த ஆண்டுக்கு முன்னர் அது பரவலாக கிடைப்பது சாத்தியமில்லை என ஊகிக்கப்படுகிறது.

Worldometers இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :