உலகம்

பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேல் அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப் படவிருந்த நிலையில் தனது ராஜினாமா கடிதத்தை மன்னர் பிலிப்பிடம் கையளித்துள்ளார்.

அண்மையில் பெல்ஜியத்தில் உலகளாவிய அகதிகள் பிரச்சனையில் ஐ.நா இன் ஒப்பந்தம் தொடர்பில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சார்லஸ் இன் ஆளும் அரசுக்கு ஆதரவு அளித்து வந்த கூட்டணி பெல்மிஸ்ட் தேசிய கட்சி தனது ஆதரவை விலக்கிக் கொண்டது. இதையடுத்துத் தான் பெரும்பான்மை இழந்த சார்லஸ் இற்கு எதிராகப் பாராளுமன்றத்தில் அந்நாட்டு எதிர்க் கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டன.

இதனால் சார்லஸ் முன்கூட்டியே தனது பதவியைத் துறந்துள்ளார். 2019 ஆமாண்டு மே மாதம் பெல்ஜியத்தில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை 1960 மற்றும் 1970 களில் நேபாளத்தின் பிரதமராக இருமுறை பதவி வகித்த நேபாள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னால் பிரதமர் துல்சி கிரி தனது 93 ஆவது வயதில் குடல் புற்று நோய் காரணமாக மரணமடைந்துள்ளார்.