உலகம்

வியாழக்கிழமை சிரியாவில் ISIS தீவிரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றியை அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அங்கிருந்து அனைத்து அமெரிக்கப் படைகளும் மீளத் திரும்புவதாகவும் அதிரடியாக அறிவித்திருந்தார்.

டிரம்பின் இந்த முடிவால் அதிருப்தி அடைந்த அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் ஜிம் மேத்திஸ் வியாழக்கிழமை தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

சிரியாவில் இருந்து தமது வலிமை வாய்ந்த 2000 துருப்புக்களையும் மீளப் பெறுவதாக அறிவித்திருந்த டிரம்ப் மத்திய கிழக்கில் அமெரிக்கா இனிமேலும் ஒரு போலிஸ் காரனாகச் செயற்படாது என்றும் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் என யாருடனும் ஆலோசிக்காது தன்னிச்சையாக டிரம்ப் இந்த முடிவை எடுத்த காரணத்தினால் பலருக்கும் அதிருப்தி ஏற்பட்ட நிலையில் தான் தனது ராஜினாமா கடிதத்தை ஜிம் மேத்திஸ் டிரம்புக்கு அளித்துள்ளார்.

மேலும் அவர் தனது கடிதத்தில் பாதுகாப்புச் செயலாளரின் முடிவுகளை எடுக்கும் உரிமைகள் அதிபரிடம் இருப்பதாகவும் அதே நேரம் எனது பார்வை மற்றும் அணுகுமுறையும் நன்றாகவே இருப்பதாகவும் எனவே பதவி விலகுவதே சரியானது என்று கருதுவதாகவும் ஜிம் மேத்திஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் அமெரிக்கப் படைகளையும் சரிபாதியாகக் குறைத்து மீள அழைப்பதற்கு அதிபர் டிரம்ப் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 2014 இல் ஆப்கானிஸ்தானில் இருந்து பன்னாட்டு இராணுவம் மீளத் திரும்பியதன் பின்னர் அங்கு வன்முறை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய நிலவரத்தில் ஆப்கானில் சுமார் 14 000 அமெரிக்கத் துருப்புக்கள் முகாமிட்டுள்ள நிலையில் இதில் சரிபாதியை டிரம்ப் மீள அழைக்கத் தீர்மானித்துள்ளார்.

அதிபர் டிரம்பின் இம்முடிவு ஆப்கான் அரசுக்குக் கலக்கத்தை ஏற்படுத்திய போதும் தலிபான்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. டிரம்பின் இம்முடிவானது அமெரிக்காவுக்கு மீளவும் ஒரு செப்டம்பர் 11 தாக்குதலுக்கு இணையான தீவிரவாதத் தாக்குதலுக்கு வழி வகுத்து விடலாம் என அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர் லிண்ட்சே கிராஹம் என்பவர் எச்சரித்துள்ளார்.

 

 

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு விமானப்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த 54 மாணவிகள் உள்ளிட்ட 61 பேரின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் இருந்து விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.