உலகம்
Typography

ஞாயிறு அதிகாலை இந்தோனேசியாவின் க்ரகடோவா தீவில் இருக்கும் எரிமலை வெடித்துச் சிதறியதால் நிலத்துக்கு அடியில் ஏற்பட்ட சரிவுகள் காரணமாக ஜாவா மற்றும் சுமாத்திரா தீவுகளுக்கு இடையே உள்ள சுந்தா நீரிணையில் பாரிய சுனாமி அலைகள் ஏற்பட்டுள்ளன.

ஜாவா கடலையும் இந்தியப் பெருங்கடலையும் இணைக்கும் இந்த சுந்தா நீரிணையில் ஏற்பட்ட சுனாமி காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை 220 ஐயும் தாண்டிச் சென்றுள்ளது. 843 பேருக்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப் படுகின்றது. 1883 ஆமாண்டு ஆகஸ்ட்டில் இல் இந்த க்ரகடோவா எரிமலை வெடித்துச் சிதறியது தான் நவீன புவியியல் வரலாற்றில் பதிவான மிகப் பெரிய எரிமலை சீற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

க்ரகடோவா தீவில் உள்ள குறித்த எரிமலையின் ஒரு பகுதி நீருக்கடியில் இருப்பதால் எரிமலை வெடிப்பு நீர் மேற்பரப்பில் சுனாமியை உண்டாக்கும். செப்டம்பரில் இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் தாக்கிய சுனாமி காரணமாக 2000 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். 14 ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 26 ஆம் திகதி 2004 இல் இந்தோனேசியாவின் வடக்குப் பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட நிலநடுக்கமும் அதனால் விளைந்த சுனாமி அலைகளும், 14 ஆசிய நாடுகளில் சுமார் 228 000 பொது மக்களைப் பலி கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்