உலகம்
Typography

தனது வயோதிகம் காரணமாக பதவி விலகுவதாக ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ அறிவித்துள்ள நிலையில் அவரது 85 ஆவது பிறந்த நாளை ஜப்பான் மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

ஜப்பானின் 125 ஆவது மன்னரான அகிஹிட்டோ கடந்த 200 ஆண்டுகளில் வயோதிகம் மற்றும் உடல் நலக்குறைவு காரணமாகப் பதவி விலகும் முதல் மன்னர் ஆவார்.

ஜப்பான் மன்னர் ஒருவர் பதவி விலக சட்டத்தில் விதி இல்லாது இருந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் பாராளுமன்றத்தில் இது தொடர்பான மசோதா நிறைவேற்றப் பட்டது. இதைத் தொடந்து தான் தனது அதிகாரப் பூர்வ ராஜினாமா முடிவை அகிஹிட்டோ அறிவித்துள்ளார். இவர் 2019 ஏப்பிரலில் 30 ஆம் திகதி பதவி விலகுவார் என ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே கடந்த ஆண்டு டிசம்பரில் அறிவித்திருந்தார்.

அகிஹிட்டோ பதவி விலகிய அடுத்த நாள் அவரின் மூத்த மகனான பட்டத்து இளவரசர் 58 வயதாகும் நருஹிட்டோ மன்னராக முடி சூட்டுவார் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது. இந்நிலையில் தான் ஒரு மன்னராக அரியணையில் உள்ள போதே அகிஹிட்டோவின் இறுதி 85 ஆவது பிறந்த நாளை ஜப்பான் மக்கள் பலர் ஒன்று கூடி ஆடல், பாடல், கலை நிகழ்ச்சிகளுடன் வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். இவருக்கு ரஷ்ய அதிபர் புதின் உட்பட பல முக்கிய உலகத் தலைவர்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS