உலகம்
Typography

இன்றைய தினம் டிசம்பர் 25 ஆம் திகதி இயேசு கிறிஸ்து பிறந்த நகரான பாலஸ்தீனத்தில் அமைந்துள்ள பெத்லகேமில் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப் பட்டது.

ஆண்டு தோறும் இலட்சக் கணக்கான மக்கள் வந்து செல்லும் பெத்லகேமில் அமைந்துள்ள மிகப் பழமையான நேட்டிவிட்டி சர்ச் என்ற தேவாலயத்துக்கு இம்முறையும் ஏராளமான பொது மக்கள் வருகை தந்தனர்.

மேலும் நேட்டிவிட்டி சர்ச்சில் நத்தார் பண்டிகைத் தினத்தில் இடம்பெறும் மிக முக்கிய பிரார்த்தனைக் கூட்டத்திலும் இவர்கள் பங்கு பற்றினர். நள்ளிரவு நேர சிறப்பு ஆராதனை நிகழ்ச்சியில் இஸ்ரேல் உட்பட பல வெளிநாடுகளைச் சேர்ந்த கிறித்தவர்கள் வந்து கலந்து கொண்டனர். இதில் பாலஸ்தீன அதிபர் மஹ்முட் அப்பாஸ், பிரதமர் ரமி ஹம்டல்லா மற்றும் மந்திரிகள் ஆகியோரும் இன மத வேறுபாடின்றி கலந்து சிறப்பித்தனர்.

இந்த நள்ளிரவு பிரார்த்தனை நிகழ்வில் இஸ்ரேலின் ரோமனிய கத்தோலிக்க தலைமை பேராயர் பியர்பட்டிஸ்டா பிஸாபல்லா என்பவரும் கலந்து கொண்டதும் அவரை ஆடல் பாடல் மற்றும் இயேசுவைப் பற்றிய துதிப் பாடல்களுடன் பொது மக்கள் வரவேற்றதும் குறிப்பிடத்தக்கது. பெத்லகேம் முழுதும் கிறிஸ்துமஸ் மரங்கள், மின் விளக்குகள் என அலங்கரிக்கப் பட்டு பொது மக்களும் உற்சாகத்துடன் காணப் பட்டனர். பல்லாயிரக் கணக்கான வெளிநாட்டவர்கள் குவிந்ததால் பல மக்களுக்குத் தங்க ஹோட்டல்களில் இடம் கிடைக்காத காரணத்தால் அவர்கள் சாலையோரத்தில் தங்கிக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் உலகம் முழுதும் இறை பாலனாம் இயேசு கிறித்து அவதரித்த தினத்தை உற்சாகமாகக் கொண்டாடி வரும் அனைத்து மக்களுடனும் நாமும் இணைந்து கொள்கின்றோம். அனைவருக்கும் 4தமிழ்மீடியா ஊடக உறுப்பினர்கள் சார்பாக இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்