உலகம்
Typography

தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் வெள்ளிக்கிழமையன்று அதிகாலை 5.32 மணிக்கு 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அர்ஜென்டி னாவின் தென்கிழக்கில் இருந்து 1500 கடல் மைல் தொலைவில் தெற்கு அட்லாண்டிக் கடலில் மையம் கொண்டிருந்தது. 

கடலுக்கு அடியில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மையம் இருந்ததாகவும் ஆனால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்றதையும் அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

எனினும் மீண்டும் அதே பகுதியில் நில அதிர்வுகள் ஏற்படும் வாய்ப்புள்ளதால் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. உயிரிழப்போ வேறு பாதிப்புகளோ ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல்கள் என்னும் வெளியாகவில்லை.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்