உலகம்
Typography

அமெரிக்க செனட் சபையின் அனுமதியின்றி அமெரிக்காவுக்கும் மெக்ஸிக்கோவுக்கும் இடையே எல்லைச் சுவர் கட்டுவது என்ற தனது கனவுத் திட்டத்தை நிறைவேற்றத் தேவைப் பட்டால் நாட்டில் அவசர நிலையையும் பிரகடனம் செய்வேன் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இது அமெரிக்க மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

டிரம்பின் இந்த கனவுத் திட்டத்துக்குப் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும் ஜனநாயகக் கட்சியினருடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததன் பின்னரே டிரம்ப் இவ்வாறு சூளுரைத்துள்ளார். மேலும் ஜனநாயகக் கட்சியினர் தொடர்ந்து பிடிவாதமாக இருந்தால் அரசுத் துறைகள் முடக்கம் ஒரு வருடம் கூட நீடிக்கும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்க மெக்ஸிக்கோ எல்லையில் பிரம்மாண்டமான சுவர் அமைப்பதற்காக உள்நாட்டு நிதியில் சுமார் 5 பில்லியன் டாலர் வழங்க வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்றமான செனட் சபையை அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

எனினும் ஜனநாயகக் கட்சியோ குறித்த திட்டமே ரத்து செய்யப் படவேண்டும் என்றும் இதற்கு நாட்டு மக்களின் வரிப் பணத்தை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது என்றும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. செனட் சபையில் இந்த சுவர் கட்டுவதற்கான செலவின மசோதா நிறைவேற்றப் பட முடியாத சூழல் ஏற்பட்டதால், வெளியுறவு உள்நாட்டுப் பாதுகாப்பு, போக்குவரத்து, விவசாயம், நீதித்துறை அடங்கலாக 9 துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு அந்தத் துறைகள் 2 வாரத்துக்கும் அதிகமாக முடங்கியுள்ளன.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்