உலகம்
Typography

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் டாரன்ஸ் பகுதியில் அமைந்துள்ள கேளிக்கை மையம் ஒன்றில் இன்று சனிக்கிழமை திடீரென இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.

மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

கொல்லப் பட்டவர்கள் மற்றும் பாதிக்கப் பட்டவர்கள் அனைவரும் ஆண்கள் என்று போலிசார் தெரிவித்துள்ளனர். தற்போது இது தொடர்பான விசாரணை முடுக்கி விடப் பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டின் பின்னணி இதுவரை தெரியவில்லை. ஆனாலும் இது இரு குழுக்கள் இடையே நடைபெற்ற மோதல் எனச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு மட்டும் துப்பாக்கிச் சூடு தொடர்புடைய சம்பவங்களில் 40 000 பேர் பலியானதாக அதிகாரிகளின் புள்ளி விபரம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS