உலகம்
Typography

அண்மைக் காலமாக ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்ற அமெரிக்காவின் நிபந்தனையையும் மீறி இந்தியா ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்கின்றது.

மேலும் ஈரானுடன் சேர்த்து ஏனைய அரபு நாடுகளுடனும் தனது சொந்த ரூபாய் மற்றும் அந்நாடுகளின் நாணயப் பரிமாற்றம் மூலம் இந்தியா வணிகம் செய்து வருகின்றது.

இதனால் டாலர் விலையேற்றத்தால் ஏற்படும் பாதிப்பு, ரூபாய் மாற்றுத் தொகை மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பு பராமரிப்பு போன்ற சிக்கல்களை இந்தியா தவிர்த்து வருகின்றது. இந்நிலையில் தான் தற்போது பண்டமாற்று முறையில் உரத்துக்குப் பதில் இரும்பை விற்பது என்ற ஒப்பந்தம் தொடர்பில் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜாவேத் ஷெரிபுடன் மத்திய தரை வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஈரானின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அதிகளவு இரும்புப் பொருட்கள் தேவைப் படுகின்றது. முக்கியமாக ஈரானின் சாபர் துறைமுகத்தை மேம்படுத்தவதற்கு இரும்பு தேவைப் படுவதால் இது தொடர்பாக இரும்புக்குப் பதில் ஈரானிடம் இருந்து உரம் பெற்றுக் கொள்வது என்ற பண்டமாற்று முறையிலான ஒப்பந்தத்துக்கு இருவரும் உடன்பட்டுள்ளனர்.

இந்த ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்தாகும் என்றும் தெரிய வருகின்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்