உலகம்
Typography

வெள்ளிக்கிழமை கென்யா தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் மீது சோமாலியாவின் தீவிரவாதப் பிரிவான அல் ஷபாப் மிக மோசமான துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது.

இதில் ஹோட்டலின் ஒரு பகுதியும் வெளியே நிறுத்தப் பட்டிருந்த வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன.

இவை தொடர்பான படங்கள் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகின்றது. தாக்குதல் நடந்த உடனே விரைந்த போலிசார் உள்ளே இருந்த பொது மக்களைப் பாதுகாப்பாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் ஹோட்டலில் உட்பகுதியினை இன்னமும் தீவிரவாதிகள் தமது கட்டுக்குள் வைத்துள்ளனர். இரவான போதும் போலிசார் மற்றும் தீவிரவாத எதிர்ப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே அங்கு கடும் மோதல் இடம்பெற்று வருவதாகத் தகவல் வெளியானது.

நைரோபியில் லக்சரி ஹோட்டல், உணவு விடுதிகள், மேலும் சர்வதேச கம்பனிகளின் பல அலுவலகங்கள் என்பன அடங்கிய D2 கம்பவுண்டில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர். மோதல்களின் போது பல துப்பாக்கி வேட்டுச் சத்தமும் கிரைனேட் தாக்குதல் சத்தமும் கேட்டபடி உள்ளது. இதுவரை இத்தாக்குதலில் 7 பேர் கொல்லப் பட்டிருக்கலாம் என்றும் ஒரு குற்றவாளி கொல்லப் பட்டும் 10 பேருக்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தும் உள்ளதாகவும் தெரிய வருகின்றது.

காயம் அடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க இரத்த தானம் அளிக்க முன்வருமாறு உள்ளூர் வைத்தியசாலைகள் கோரிக்கை வைத்துள்ளன. பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப் படுகின்றது. 2013 இல் நைரோபியின் வெஸ்ட்கேட் மால் மீது அல் ஷபாப் தொடுத்த தாக்குதலில் குறைந்தது 67 பேர் கொல்லப் பட்டது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்