உலகம்
Typography

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் ஆகியோருக்கு இடையே அடுத்த 2 ஆவது சந்திப்பை ஒழுங்கு செய்யும் முகமாக வடகொரிய அரசின் முக்கிய அதிகாரியொருவர் அமெரிக்கா வந்தடைந்துள்ளார்.

சீனத் தலைநகர் பீஜிங்கில் இருந்து அமெரிக்கா வந்துள்ள கிம் யோங் சோல் என்ற இந்த அதிகாரி வடகொரிய அதிபர் கிம் இடமிருந்து டிரம்புக்கு ஒரு கடிதத்தைக் கொண்டு சென்றாதாக தென்கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் வெள்ளிக்கிழமை அமெரிக்க வெளியுறவு அமைச்சின் செயலாளர் மைக் பாம்பேவை இனையும் கிம் யோங் சோல் சந்திக்கவுள்ளார். கடந்த ஜுன் மாதம் இந்த இரு தேசங்களின் தலைவர்களும் சிங்கப்பூரில் அணுவாயுதத்தைக் களைவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில் 2 ஆவது சந்திப்பு வியட்நாமில் நடைபெறலாம் என ஊகங்கள் கிளம்பியுள்ளன.

இந்நிலையில் வியட்நாம் பிரதமர் குயென் ஸைவான் தனியார் தொலைக் காட்சி ஒன்றிட்கு அளித்த பேட்டியில் அமெரிக்க மற்றும் வடகொரிய அதிபர்களுக்கு இடையேயான 2 ஆவது பேச்சுவார்த்தையைத் தமது நாட்டில் நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. வடகொரியாவின் முன்னால் உளவுப் படைத் தலைவரான ஜெனரல் கிம் யோங் சோல் வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் இன் வலது கரமாக வர்ணிக்கப் படுகின்றார். கடந்த ஜூன் மாதப் பேச்சுவார்த்தைக்கு முன்பும் இவர் அதிபர் டிரம்பை வாஷிங்டனில் சந்தித்து கிம்மின் கடிதம் ஒன்றை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்