உலகம்
Typography

கொலம்பியா நாட்டின் தலைநகரான போகோடாவில் அமைந்துள்ள போலிஸ் பள்ளி ஒன்றின் மீது நடத்தப் பட்ட கார்க் குண்டுத் தாக்குதலில் 21 பேர் வரை பலியாகி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அமெரிக்க நாடான கொலம்பியாவின் தலைநகர் போகோடாவின் போலிஸ் அகாடமியில் அமைந்துள்ள பள்ளி மீது வியாழக்கிழமை விழா நடந்து கொண்டிருந்த போது மேற்கொள்ளப் பட்ட இத்தாக்குதல் அங்கு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

54 இற்கும் அதிகமானவர்கள் இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்துள்ளனர். தற்போது தீ அணைக்கப் பட்டு மீட்புக் குழுவினர் மூலம் காயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப் பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். வைத்திய சாலையில் பலர் மரணம் அடைந்ததால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இது தவிர காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க கொலம்பிய குடிமக்களை இரத்த தானம் செய்ய வருமாறு பொகொட்டா சுகாதாரத் துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொலம்பியாவில் போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய கொரில்லா போராளிகளுடன் அங்கு குழப்ப நிலை நீடித்து வருகின்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்