உலகம்
Typography

சிரியா மீதான போர்தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் பலியாகி விடுகின்றனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கட்டிடங்களுக்கு இடையே மீட்கப்பட சிறுவன் ஓம்ரானின் புகைப்படம் அதிர்ச்சி அடைய செய்தது. அந்த புகைப்படத்தில் தூசி படிந்த உடலில் தலையில் ரத்த காயங்களுடன் ஐந்து வயதான அச்சிறுவன் குழுப்பமான மனநிலையில் அமர்ந்திருக்கிறான். அடிக்கடி தனது காயங்களை தொட்டுப் பார்கிறான்.   

அலெப்போ மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டுள்ள ஒம்ரானுக்கு ஆபத்தான காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என ஓம்ரானை பரிசோதித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் சிரியாவைச் சேர்ந்த அய்லான் என்ற சிறுவன் துருக்கி கடற்கரையில் இறந்த நிலையிலிருந்த புகைப்படம் அனைவர் மனதிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்