உலகம்
Typography

அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பினால் வெளியிடப் பட்ட 81 பக்கம் கொண்ட ஏவுகணைப் பாதுகாப்பு மீளாய்வு அறிக்கை மீதான பெண்டகனின் அறிவித்தல் படி ரஷ்யாவிடம் இருந்து 5 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான S-400 ரக வான் பாதுகாப்பு ஏவுகணைப் பொறிமுறையை இந்தியா பெற்றது தொடர்பில் கவனம் செலுத்தப் பட்டுள்ளது.

இது தொடர்பில் வெளிப்படையாகவே தனது அதிருப்தியை அமெரிக்கா வெளிப்படுத்தியும் இருந்தது. இந்நிலையில் பெண்டகன் மேலும் தெரிவிக்கையில் இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் சமநிலையைப் பேணவும், அமெரிக்க இந்திய இரு தரப்பு உறவு வலுப்படவும் என சாத்தியமான ஏவுகணைப் பாதுகாப்பு கூட்டுறவு தொடர்பில் டிரம்ப் நிர்வாகவும் இந்தியாவுடன் பேசியிருப்பதாக அறிவித்துள்ளது.

ஏற்கனவெ தெற்காசியாவில் குறிப்பிடத்தக்க சில நாடுகள் அதி நவீன தொழிநுட்ப வசதி கொண்டா கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளையும் கப்பல் ஏவுகணைகளையும் அபிவிருத்தி செய்து வருவது தொடர்பில் பெண்டகன் கவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறிப்பிட்ட பெண்டகனின் அறிக்கையில் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மேற்கொண்டு வரும் ஏவுகணை அபிவிருத்தி செயற்திட்டங்கள் யாவும் அமெரிக்காவுக்கு மிக முக்கியமான அச்சுறுத்தல் என்று தெரிவிக்கப் பட்ட போதும் எவ்வகையான ஏவுகணைப் பாதுகாப்பு கூட்டுறவை இந்தியாவுடன் அமெரிக்கா பேசியுள்ளது என்பது தொடர்பில் தகவல் அளிக்கவில்லை.

ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் நிகழ்காலத்தில் அமெரிக்காவின் ஏவுகணைப் பாதுகாப்புப் பொறிமுறையின் கீழ் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதில் அவுஸ்திரேலியாவும் இணைந்து கொள்ளப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS