உலகம்
Typography

மடகாஸ்கர் நாட்டில் அண்மையில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் 55.6% வீத வாக்குகளால் வெற்றி பெற்ற ஆண்ட்ரி ரஜோலினா சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

ஆப்பிரிக்கா கண்டத்தின் தென்கிழக்கே இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள தீவு நாடுகளில் ஒன்றான மடகாஸ்கரில் அதிபர் பதவிக்கான தேர்தல் முடிவுகள் ஜனவரி 8 ஆம் திகதி வெளியாகி இருந்தன.

பதவியேற்பு விழாவில் ஆண்ட்ரி ரஜோலினா உரையாற்றிய போது தனது ஆட்சிக் காலத்தில் மடகாஸ்கரின் 6 மாகாணங்களும் சரிசமமான வளர்ச்சியைப் பெற உழைப்பேன் என்றும், சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் மையங்கள் அமைக்கப் பட்டு மக்களுக்கு மிகக் குறைவான விலையில் மின் விநியோகிக்க ஆவன செய்வேன் என்றும் வாக்குறுதி அளித்தார்.

இவர் மேலும் கூறுகையில், மடகாஸ்கரில் சுதந்திரத்துக்குப் பின்னர் தொடர்ந்து 3 ஆவது முறையாக சுமுகமான முறையில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது என்பது உலக அரசியல் வரலாற்றில் முக்கிய தடமாகும் என்றும் குறிப்பிட்டார். ஆண்ட்ரி ரஜோலினாவின் பதவியேற்பு விழாவில் 35 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கு பற்றிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்