உலகம்
Typography

சீனாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 28 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு 6.6% வீதமாகக் குறைந்துள்ளது.

உலகின் 2 ஆவது மிகப் பெரிய பொருளாதார வல்லரசான சீனாவின் இந்த வீழ்ச்சிக்கு அண்மைக் காலத்தில் அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் காரணமாக அமைந்துள்ளது. இதனால் சீனாவின் ஏற்றுமதி குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ளது.

சீனாவின் தேசியப் புள்ளியியல் வெளியிட்ட இந்தத் தகவலில் சீனப் பொருளாதார வளர்ச்சி கடந்த 2017 இல் 6.8% வீதமாக இருந்ததாகவும் கடந்த 1990 ஆமாண்டு அதன் பொருளாதார வளர்ச்சி 3.9% வீதமாகவும் இருந்த பின் தற்போது கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பின்பு 6.6% வீதமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி சர்வதேச பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என பொருளியலாளர்கள் கூறுகின்றனர்.

சீன அரசு ஏற்றுமதி தலைமையிலான வளர்ச்சியைக் காட்டிலும் உள்நாட்டு உற்பத்தி சார்ந்த வளர்ச்ச பாதைக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. சமீப மாதங்களாக அங்கு பொருளாதார மந்த நிலையைச் சீரமைக்கும் நோக்கில் சீன கொள்கை வகுப்பாளர்கள் முயற்சித்து வருகின்றனர். மறுபுறம் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிப் பட்டியலில் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி 5 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது இந்தியா.

உலக நாடுகளின் உள்ளூர் உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு B.W.C என்ற அமைப்பால் வெளியிடப் பட்ட பொருளாதார வளர்ச்சி குறித்த பட்டியலில் தான் இத்தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வருடம் இந்தப் பட்டியலில் இந்தியா 7 ஆவது இடத்தில் இருந்தது. இங்கிலாந்தின் பின்னடைவுக்கு பிரெக்ஸிட் விவகாரம் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. பொருளாதார வளர்ச்சி குறித்த இந்தப் பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்காவும், 2 ஆவது இடத்தில் சீனாவும், அதற்கடுத்து ஜப்பானும், ஜேர்மனியும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்