உலகம்
Typography

துருக்கியில் குர்து இனத்தவர்கள் பெருமளவில் பங்கேற்ற திருமண நிகழ்ச்சியொன்றில் பயங்கரவாதி நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் நேற்று அதிகாலை 51 பேர் உயிரிழந்தனர்.

கோடை காலத்தில் திருமண விழாக்கள் தெருக்களில் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் காஸியன்டெப் மாகாணத்தில் பெய்பஹ்ஸ் என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற திருமணவிழாவில் தெருவில் எல்லோரும் உற்சாகமாக நடனம் ஆடிக்கொண்டிருக்கும் சமயம்,  கூட்டத்தில் புகுந்த தற்கொலைப் படை தீவிரவாதி வெடித்துச் சிதறினான். இந்த தாக்குதலில் 51 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாகவும், மணமகன், மணமகள் உட்பட  73 பேர் படுகாயம் அடைந்ததாகவும் மற்றும் தாக்குதல் நிகழ்த்தியவர் 12 வயது சிறுவன் எனவும் தகவல்கள் தெருவிக்கின்றன. 

ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாக துருக்கி அரசு குற்றம் சாட்டியுள்ளது. இந்த தாக்குதலுக்கு துருக்கி அதிபர் எர்டோகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்