உலகம்
Typography

சமீபத்தில் காஷ்மீரின் புல்மாவா பகுதியில் இராணுவப் பேரணி மீது ஜெய்ஸ் இ முகமது இயக்கத் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதல் சீ ஆர் எஃப் சி அமைப்பைச் சேர்ந்த 44 இந்திய இராணுவ வீரர்கள் பலியாகி இருந்தனர்.

கிட்டத்தட்ட இந்திய பாகிஸ்தானுக்கிடையே அதிகபட்ச போர்ப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்தத் தாக்குதலை அடுத்து இந்திய இராணுவம் இதற்குப் பதிலடி கொடுத்துள்ளது.

புல்மாவா மாவட்டத்தின் பிங்லான் பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட இந்திய இராணுவத்தினர் இரு முக்கிய தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்றனர். பின்னர் இவர்களது சடலங்கள் அடையாளம் காணப் பட்ட போது இவர்கள் இருவரும் ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் இரு முக்கிய கமாண்டோக்களான கம்ரன் மற்றும் காஸி எனத் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இப்பகுதியில் இந்திய இராணுவத்தினர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு வருகின்றனர்

இதேவேளை தற்போது பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு விஜயம் செய்துள்ள சவுதி முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்ற நிலையைத் தவிர்க்கப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நியூடெல்லிக்கும் செல்லவுள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்