உலகம்
Typography

சவுதி அரேபியாவில் சிறையில் இருக்கும் 2000 இற்கும் மேற்பட்ட பாகிஸ்தானிய கைதிகளை விடுவிக்க அந்நாட்டு முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது அரச முறைப் பயணமாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை வந்தடைந்துள்ள இளவரசர் சல்மான் பாகிஸ்தான் அரசுடன் 20 பில்லியன் டாலர்கள் பெறுமதியான 8 ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

ஏற்கனவே புல்மாவா தாக்குதலுக்குப் பின் இந்தியாவுக்கு பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப் படும் பொருட்களுக்கு இனிமேல் 200% வீத வரி என இந்தியா அறிவித்துள்ள நிலையில், சவுதியுடனான இந்த ஒப்பந்தங்கள் பாகிஸ்தானுக்கு நன்கு கை கொடுக்கும் என்று கருதப் படுகின்றது. இது தவிர பாகிஸ்தானுக்கு மிக நெருக்கமான நாடு என்றும் அதனுடனான உறவு மேலும் தொடரும் எனவும் சவுதி இளவரசர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது சவுதி அரேபிய சிறைகளில், பாகிஸ்தானைச் சேர்ந்த் 3000 பேர் வரை பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய வழக்குகளின் கீழ் அடைபட்டுள்ளனர். இந்நிலையில் தான் கருணை அடிப்படையில் இவர்களில் 2107 பேரை உடனே விடுதலை செய்ய பாகிஸ்தன் அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்