உலகம்
Typography

சீனாவின் இறக்குமதிப் பொருட்களுக்கான தீர்வை வரியினை அமெரிக்கா அதிகரித்ததை அடுத்து உலகளாவிய ரீதியில் மறைமுகமாக வர்த்தகப் போர் தோன்றியிருந்த நிலையில், இதனை முகம் கொடுக்கும் விதத்தில் அமெரிக்காவும் சீனாவும் பல தடவைகள் வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.

இதன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் வாஷிங்டனில் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவின் நடவடிக்கைக்குப் பதில் நடவடிக்கையாக சீனாவும் அமெரிக்காவின் இறக்குமதிப் பொருட்களுக்கு வரி விதிப்பை அதிகரித்து வர்த்தகப் போரில் முக்கிய தாக்கத்தைச் செலுத்தியது. எனினும் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைளின் பலனாக இந்த வரி விதிப்பு நடவடிக்கைகளை மார்ச் 1 ஆம் திகதி வரை தற்காலிகமாக ஒதுக்கி இரு நாடுகளும் சமரசம் கண்டன. எனினும் வாஷிங்டனிலும், பீஜிங்கிலும் நடைபெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றகரமான எந்தவொரு உடன்படிக்கையும் எட்டப் படவில்லை.

ஆனால் பேச்சுவார்த்தை சிறப்பாகப் போய்க் கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். மேலும் அவசியமான கெடு திகதியை மார்ச் 1 இற்குப் பிறகும் நீட்டிக்கத் தயார் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ள அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்