உலகம்
Typography

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிப் பலியானவர்கள் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது.

இக்குடியிருப்பின் ஒரு பகுதியில் இருந்த இரசாயனப் பொருட்கள் வைத்திருக்கும் குடோனில் ஏற்பட்ட தீ தான் பின்னர்4 அடுக்கு மாடிகளில் உள்ள குடியிருப்பு முழுதும் பரவியுள்ளது.

இதில் பலியானவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப் படுகின்றது. தற்போது தீயணைப்பு வீரர்களால் தீ முற்றாக அணைக்கப் பட்டுள்ள நிலையில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மக்களைத் தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இத் தீ விபத்தில் குறித்த குடியிருப்புப் பகுதியின் அருகே நிறுத்தி வைக்கப் பட்டிருந்த 2 வாகனங்கள் மற்றும் 10 சைக்கில் ரிக்‌ஷாக்களும் கருகியுள்ளன.

தீயை அணைக்கும் பணியில் சுமார் 200 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப் பட்டனர். அடுக்குமாடியில் தீ பரவிய போது பொது மக்கள் வெளியேறும் அவசரத்தில் ஒருவரை இன்னொருவர் தாண்டிச் செல்ல முயன்ற போது ஏற்பட்ட நெரிசலால் தான் உள்ளே சிக்கியவர்கள் தீக்கு இரையாகி உள்ளனர். இரசாயனப் பொருட்கள் இருந்த இடத்தில் கேஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு தீயை ஏற்படுத்தியிருக்கக் கூடும் எனக் கருதப் படுகின்றது. பங்களாதேஷில் பல தொழிற்சாலைக் கட்டடங்களும், குடியிருப்புக்களும் மிக மோசமான பராமரிப்புக் காரணமாக அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்