உலகம்

2008 ஆமாண்டு இந்தியாவின் வர்த்தக மையமான மும்பையில் பாகிஸ்தானில் இருந்து வந்து ஊடுருவி தீவிரவாதிகள் சராமரியாகப் பொது மக்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் பல சுற்றுலாப் பயணிகள் உட்பட நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் பலியாகி இருந்தனர்.

இத்தாக்குதலுக்கு மூளையாகச் செயற்பட்டவன் எனக் கருதப் படும் ஹபீஸ் சயீதின் ஜமாத் உத் தாவா என்ற தீவிரவாத அமைப்புக்குப் பாகிஸ்தான் அரசு தற்போது தடை விதித்துள்ளது.

இந்தத் தீவிரவாதக் குழுவுடன் சேர்த்து ஹபீஸ் சயீதின் ஃபலாஹ் ஏ இன்சானியா என்ற தொண்டு நிறுவனத்துக்கும் பாகிஸ்தான் அரசு வியாழக்கிழமை தடை விதித்துள்ளது. அண்மையில் காஷ்மீரின் புல்மாவா பகுதியில் இந்திய இராணுவத்தினர் மீது பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40 இற்கும் அதிகமான வீரர்கள் பலியாகி இருந்தனர். இத்தாக்குதலை அடுத்து சர்வதேச அளவில் பாகிஸ்தான் அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடி காரணமாகவே அதிரடியாக அந்நாட்டு அரசு இந்த ஜமாத் உத் தாவா அமைப்பை உடனடியாகத் தடை செய்துள்ளது.

வியாழக்கிழமை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்புக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப் பட்ட போதும் காஷ்மீர் புல்மாவா தாக்குதலுடன் தொடர்புடைய ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்குத் தடை விதிக்கப் படாதது குறிப்பிடத்தக்கது. ஆயினும் சுமார் 50 000 தன்னார்வ தொண்டர்கள் மற்றும் ஊழியர்களுடன் ஜமாத் உத் தாவா அமைப்பு நடத்தி வந்த பள்ளிகள், மத போதனை மையங்கள், மருத்துவ மனைகள் என்பவை யாவற்றையும் பாகிஸ்தான் அரசு தடை செய்ய முடிவெடுத்துள்ளது.

மும்பைத் தாக்குதலுடன் தொடர்புடைய ஹபீஸ் சயிதை 2012 ஆமாண்டே அமெரிக்கா சர்வதேச தீவிரவாதியாக அறிவித்திருந்தது. மேலும் இவரின் தலைக்கு 10 மில்லியன் டாலர் சன்மானமும் அறிவிக்கப் பட்டது. இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற புல்மாவா தாக்குதல் தொடர்பில் இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“எமது நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருந்தால், எம்மைப் புறந்தள்ளிவிட்டு ஒரு அரசியலமைப்பினை அரசாங்கத்தினால் உருவாக்க முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

“எமது மக்களின் உரிமைகளுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும்.” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

7 மாநில முதல் மந்திரிகளுடனான கொரோனா ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.

இன்று அதிகாலை குஜராத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி ஆலையில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது.

நாளை வெள்ளிக்கிழமை முதலான வார இறுதி நாட்களில், சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளில் பனிப்பொழிவு இடம்பெறலாம் என சுவிஸ் வானிலை மையம் அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் புகழ்பெற்ற லொசேன் ஈ.எச்.எல் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் கல்விக் கூடத்தில் சுமார் 2,500 மாணவர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பிராந்திய அதிகாரிகள் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.