உலகம்
Typography

சீனா, உலகின் நீளமான மற்றும் உயரமான கண்ணாடி பாலத்தை சுற்றுலா பயணிகளுக்காக ஹூனன் மாகாணத்தில் சனிக்கிழமை திறந்துவைத்துள்ளது.

சுமார் 1,410 அடி(430 மீட்டர்) நீளத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. ஹூனன் மாகாணத்தில் உள்ள ஜங்ஜியஜியி கேன்யான் என்ற பகுதியில் தரையில் இருந்து 300 அடி உயரத்தில் இந்த பாலம் உள்ளது. இந்த பாலம் தியான்மென் மலையின் தேசிய பூங்காவில் உள்ள இரண்டு குன்றுகளுக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வடிவமைத்தவர் ஹாய்ம் டோடன் எனும் இஸ்ரேல் இன்ஜினியர்.

இந்த பாலத்தை கண்டுகளிக்க  8 ஆயிரம் பார்வையாளர்கள் தினமும் அனுமதிக்கப்படுவார்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்